முதல் முறையாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து அணி!
ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து அணி முதல் முறையாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிரிலிங் - படம் | அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து அணி முதல் முறையாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
அயர்லாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முத்தரப்பு ஒருநாள் தொடர் நடத்தப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. அண்மையில் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது என தெரிவித்ததால் முத்தரப்பு தொடர் கைவிடப்பட்டது.
முத்தரப்பு தொடர் கைவிடப்பட்ட நிலையில், அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. அயர்லாந்து அணி முதல் மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் ஷகீன்ஸ் அணிக்கு எதிராகவும், கடைசி மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் தேசிய அணிக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.
âââââââNEWSâââââââ
— Cricket Ireland (@cricketireland) November 26, 2026
Ireland Men will head to Pakistan in January: https://t.co/rIseBwovX8#BackingGreen #FailteSolar âï¸ð pic.twitter.com/FkCjVLJaNh
இந்தத் தொடருக்காக அயர்லாந்து அணி அடுத்தாண்டு ஜனவரி 9-ஆம் தேதி லாகூர் செல்லவுள்ளது. ஜனவரி 13 முதல் ஜனவரி 17 வரையிலான இடைவெளியில் அயர்லாந்து அணி, பாகிஸ்தான் ஷகீன் அணிக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜனவரி 20 முதல் ஜனவரி 24 வரையிலான இடைவெளியில் கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் தேசிய அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
அனைத்துப் போட்டிகளும் லாகூரில் உள்ள கடாஃபி திடலில் நடைபெறவுள்ளன. அண்மையில் பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரை ஷகீன் ஷா அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
Summary
The Ireland team is set to tour Pakistan for the first time to play in a one-day series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


