பாகிஸ்தான் மண்ணில் இருவர் சதம்: 404 ரன்களுடன் வலுவான நிலையில் இலங்கை!
இலங்கை - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் குறித்து...

குசல் மெண்டிஸ் - தனஞ்செய டி செல்வா - படம்: எக்ஸ் / ஸ்ரீ லங்கா கிரிக்கெட்
ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் இலங்கை - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கை அணி 102 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 404 ரன்கள் குவித்துள்ளது. இலங்கையின் தனஞ்சய டி சில்வா - குசல் மெண்டிஸ் 249* ரன்கள் பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து வருகிறார்கள்.
நவ.9ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 434/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
அடுத்து விளையாடிய இலங்கை அணி இரண்டாம் நாளில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், மூன்றாம் நாளில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே இழந்து 400 ரன்களை கடந்து அசத்தியுள்ளது.
இதில் தனஞ்சய டி சில்வா 167*, குசல் மெண்டிஸ் 117 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள். மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி பாகிஸ்தானை விட 30 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது.
நான்காவது நாளில் இலங்கை அணி அதிரடியாக விளையாடி தேநீர் இடைவேளையில் 250+ ரன்கள் முன்னிலையில் டிக்ளேர் செய்யுமானால் வெற்றிக்கும் வாய்ப்பிருக்கிறது.
பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பந்துவீச்சில் சொதப்பியே வருகிறது. முகமது அப்பாஸ் நம்பிக்கையை அளித்தாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Stumps, Day 3: A magnificent day with the bat in Rawalpindi! ð
— Sri Lanka Cricket ð±ð° (@OfficialSLC) November 11, 2026
Sri Lanka finishes the day on 404/4, trailing Pakistan's first-innings total by just 30 runs. #PAKvSL pic.twitter.com/XNc9vgMObg
Summary
Day 3: Stumps ,Two hundred in Pakistan soil: Sri Lanka in a strong position with 404 runs!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


