
ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய நட்சத்திர வீரர் ஹார்திக் பாண்டியா விளையாடுவதில் சந்தேகம்...
ஹார்திக் பாண்டியா.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா விளையாடுவதில் சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிதான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற செப். 13 ஆம் தேதி தொடங்குகிறது. மூன்று போட்டிகளும் தில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் திடலில் நடைபெறுகின்றன.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக துபை போன்ற பொதுவான கிரிக்கெட் திடல்களிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஆப்கானிஸ்தான் - இந்தியா மோதும் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் போட்டியை நடத்தும் நாடாகவும், இந்திய அணி வெளிநாட்டு அணியாகவும் களமிறங்குகிறது.
இந்தத் தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், இந்திய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
32 வயதான ஹார்திக் பாண்டியா கடந்த மே மாதம் 24 ஆம் தேதி ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடைசியாக விளையாடியிருந்தார். அதன்பின், கால் தசைப்பிடிப்பு காரணமாக எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.
இந்திய அணிக்காக அவர் கடைசியாக மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார்.
இந்திய மண்ணில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தவறவிட்ட பாண்டியா, அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களையும் தவறவிட்டார். அவரின் காயம், சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதை மேலும் தாமதப்படுத்தியுள்ளது.
உலகளவில் குறிப்பிடத்தக்க சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹார்திக் பாண்டியா, 138 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 9 அரைசதங்கள் உள்பட 2,288 ரன்களையும், 114 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் 2,000 ரன்கள், 100 விக்கெட்டுகள் என்ற சாதனையைப் படைத்த 5 வீரர்களில் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
Summary
Hardik Pandya's return to international cricket is poised to face another roadblock, as a late leg niggle derailed his plans at the BCCI Centre of Excellence (CoE) and puts the all-rounder on the back foot for the three-match T20I series against Afghanistan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





