ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புகுடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்திய ஹார்திக் பாண்டியா!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்திய ஹார்திக் பாண்டியாவைப் பற்றி...

News image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்திய ஹார்திக் பாண்டியா.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 10:21 am IST

இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று முடிக்காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தார்.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், சமீபத்திய நாள்களாக அவர் விளையாடவில்லை. டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பாண்டியா, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை.

பல்வேறு சர்ச்சைகளில் எப்போதும் சிக்கித் தவிக்கும் ஹார்திக் பாண்டியா, அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடர் மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தயாராகும் முனைப்பில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஐபிஎல்லில் ஹார்திக் பாண்டியாவின் தலைமையில், மும்பை அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால், மும்பை அணியிலிருந்து விலகவுள்ளதாகவும், அவர் சென்னை அணியில் இணையப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஹார்திக் பாண்டியா இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை புரிந்து சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் செய்வதற்கு முன்னதாக, அவர் மொட்டை அடித்து முடிக் காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்.

சாமி தரிசனத்தின்போது ஹார்திக் பாண்டியாவின் காதலி மஹிகா சர்மாவும் உடனிருந்தார். பாரம்பரிய உடையில் வந்திருந்த இருவரும், ஏழுமலையான் சன்னதியில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ஹார்திக் பாண்டியா மொட்டை அடித்த புகைப்படங்கள் மற்றும் திருப்பதி கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Summary

Hardik Pandya visited the Sri Venkateswara Swamy Temple in Tirumala with rumoured girlfriend Mahieka Sharma, participated in Suprabhatham Seva and was seen with a tonsured head.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.