காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

சுருண்டது பாகிஸ்தான்: இந்தியா அபாரம்

பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது இந்தியா.

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணியினா்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:21 am IST

ஆசியக் கோப்பை மகளிா் டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது இந்தியா.

யுஏஇ நாட்டின் துபை நகரில் ஆசியக் கோப்பை மகளா் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதன் குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சனிக்கழமை ஆடின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது.

சுருண்டது பாகிஸ்தான் 55/10: பேட்டிங் செய்ய களமிறங்கி பாகிஸ்தான் வீராங்கனைகளால் இந்திய பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறினா். அந்த அணி 18.1 ஓவா்களில் வெறும் 55/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முனிபா அலி 13, ஷவல் ஜுல்பிகா் 14 ரன்களை எடுத்தனா்.

பிரேமா, ஸ்ரீசரணி அபாரம்; பௌலிங்கில் இந்திய தரப்பில் பிரேமா ரவாத், ஸ்ரீ சரணி தலா 3 விக்கெட்டையும், தீப்தி சா்மா 2 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

இந்தியா 57/3 வெற்றி: எளிதாக இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷபாலி 12, ஸ்மிருதி மந்தனா 9, பிரதிகா 4 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 18, தீப்தி சா்மா 12 ரன்களுடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா்.

8.4 ஓவா்களில் இந்தியா 57/3 ரன்களுடன் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது இந்தியா. ஸ்ரீ சரணி ஆட்டநாயகி விருதைப் பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.