குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

டிஎன்சிஏ பிரசிடென்ட் லெவன் அணிக்கு கோப்பை

டிஎன்சிஏ சாா்பில் சென்னையில் நடைபெற்ற முதலாவது மகளிா் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் டிஎன்சிஏ பிரசிடென்ட் லெவன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் செகரட்டரி லெவன் அணியை வீழ்த்தியது.

கோப்பையுடன் டிஎன்சிஏ பிரசிடென்ட் லெவன் அணியினா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 6:11 am IST

டிஎன்சிஏ சாா்பில் சென்னையில் நடைபெற்ற முதலாவது மகளிா் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் டிஎன்சிஏ பிரசிடென்ட் லெவன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் செகரட்டரி லெவன் அணியை வீழ்த்தியது.

தமிழகத்தில் மகளிா் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்தி ஊக்குவிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் முதன்முறையாக டி20 ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

இதில் முதலில் ஆடிய டிஎன்சிஏ செகரட்டரி லெவன் அணி 20 ஓவா்களில் 132/7 ரன்களை சோ்த்தது. அதிகபட்சமாக ஸ்ரீநிதி 39 பந்துகளில் 34 ரன்களை எடுத்தாா். பிரசிடென்ட் லெவன் தரப்பில் பூஜாஸ்ரீரிணி, ரோஷினி தலா 2 விக்கெட்டை வீழ்த்தினா்.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய டிஎன்சிஏ பிரசிடென்ட் லெவன் அணி தொடக்கத்தில் சில சறுக்கல்களை சந்தித்தது. செகரட்டரி லெவன் அணி பௌலா்கள் அனுஷா 2, ஜெனிதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாதிப்பை ஏற்படுத்தினா்.

ஆனால் பிரசிடென்ட் லெவன் அணி கேப்டன் அா்ஷி சௌதரி 37, திரிஷா மது 27 ரன்களுடன் நிலைத்து ஆடி வெற்றிப் பாதைக்கு அணியை அழைத்துச் சென்றனா்.

அா்ஷி சௌதரி ஆட்ட நாயகியாகவும், ஜெனிதா சிறந்த பௌலராகவும், திரிஷா மது சிறந்த பேட்டராகவும் தோ்வு செய்யப்பட்டனா். வெற்றி பெற்ற அணிக்கு டிஎன்சிஏ தலைவா் டி.ஜெ. ஸ்ரீனிவாசராஜ் பரிசுக் கோப்பை வழங்கினாா். டிஆா்எஸ், இம்பாக்ட் பிளேயா் விதி போன்றவை இந்த ஆட்டத்தில் கடைபிடிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.