மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்

கடைசி டி20: இங்கிலாந்துக்கு 125 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Sonny Baker delighted after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சோனி பேக்கர் - படம் | AP

Published On :

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் விளையாடியது.

124 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

முதலில் விளையாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கமிந்து மெண்டிஸ் 35 ரன்கள் எடுத்தார். கேப்டன் சரித் அசலங்கா 16 ரன்கள், தாசுன் ஷானகா 12 ரன்கள் மற்றும் லகிரு உதாரா 10 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜாக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லியம் டாஸன் மற்றும் ஜேமி ஓவர்டான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the third T20 match against England, the Sri Lankan team was bowled out for 124 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.