
மேத்யூ ப்ரீட்ஸ்க், மார்கோ யான்சென் அசத்தல்; ஆஸ்திரேலியாவுக்கு 298 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்துள்ளது.

படம் | AP
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் இன்று (செப்டம்பர் 24) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் விளையாடியது.
மேத்யூ ப்ரீட்ஸ்க், மார்கோ யான்சென் அசத்தல்; ஆஸி.க்கு 298 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் மேத்யூ ப்ரீட்ஸ்க் மற்றும் மார்கோ யான்சென் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ ப்ரீட்ஸ்க் சதம் விளாசியும், மார்கோ யான்சென் அரைசதம் விளாசியும் அசத்தினர். மேத்யூ ப்ரீட்ஸ்க் 106 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மார்கோ யான்சென் 59 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
அவர்களைத் தொடர்ந்து, கேப்டன் டெம்பா பவுமா 30 ரன்கள், ரியான் ரிக்கல்டான் 27 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஜோஷ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
Summary
Batting first in the first ODI against Australia, the South African team scored 297 runs for the loss of 8 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







