ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை அல்ல!

சர்வதேச ஆட்டங்களிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்கிற முடிவை...

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:57 pm

எழில்

ரஷிய உலகக் கோப்பை போட்டியிலும் வெல்ல முடியவில்லை என்றால் மெஸ்ஸி ஓய்வு பெற்றுவிடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதை மறுத்துள்ளார் அர்ஜென்டீனா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்போலி. 

குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனா, 1978, 1986 ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றது. தற்போது நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இடம் பெற்ற நிலையில் கடந்த 2014 உலகக் கோப்பையில் இறுதிச் சுற்று வரை முன்னேறியது. மேலும் 2015, 2016 கோபா அமெரிக்க போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.

ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்போலி கூறியதாவது: உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவதில் மெஸ்ஸி மிக ஆர்வமாக உள்ளார். சர்வதேச ஆட்டங்களிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்கிற முடிவை அவரே எடுப்பார். இது அவருடைய கடைசி உலகக் கோப்பை என நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.