ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள்! தோனிக்குக் கிடைத்த பலத்த வரவேற்பு! (விடியோக்கள்)

சிஎஸ்கே வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தைக் காண பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருகை தந்துள்ளார்கள்... 

News image
Updated On :18 மார்ச் 2019, 6:47 am

எழில்

ஐபிஎல் (2019) 12-வது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் தினமும் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சிஎஸ்கே வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தைக் காண பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருகை தந்துள்ளார்கள். வலைப்பயிற்சிக்காக தோனி மைதானத்துக்கு வந்தபோதும் பலத்த வரவேற்பு அளித்தார்கள். ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்து தோனியைத் தொட முயன்றபோது தோனி தனது வழக்கமான பாணியில் அவருடன் ஓடிப்பிடித்து விளையாடினார். இதன் காணொளிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.