புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உலகக் கோப்பைப் போட்டியில், விராட் கோலியை மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்வேனா?: பென் ஸ்டோக்ஸ் பதில்!

உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் நான் விளையாடுவேன் என எண்ணுகிறேன். அப்போது நான் பந்துவீசும்போது விராட் கோலி பேட்டிங் செய்தால்...

News image
Updated On :26 மார்ச் 2019, 8:38 am

எழில்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப். கிறிஸ் கெயில் அபாரமாக ஆடி 79 ரன்களை விளாசினார். முதலில் ஆடிய பஞ்சாப் 184/4 ரன்களையும், பின்னர் ஆடிய ராஜஸ்தான் 170/9 ரன்களையும் எடுத்தன. 

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஒன்று ஏற்பட்டது. 2 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தார் அஸ்வின்.  அவர் பந்துவீச முயன்றபோது கிரிஸுக்கு வெளியே பட்லர் பேட்டை நகர்த்தியதால் சமயோசிதமாக மன்கட் செய்தார் அஸ்வின். எனினும் இதுபோல ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வது தவறு என ஷேன் வார்னே உள்பட பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு எதிராக  ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள்.

இந்நிலையில், உலகக் கோப்பைப் போட்டியில் விராட் கோலியை ஸ்டோக்ஸ் இதுபோல மன்கட் முறையில் அவுட் செய்தால் அதற்கு இந்திய ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பார்களா என்கிற கேள்வியை ஷேன் வார்னே எழுப்பியுள்ளார். இதையடுத்து ஸ்டோக்ஸிடம் இக்கேள்வியைப் பலரும் முன்வைத்தார்கள். இதற்கு ஸ்டோக்ஸ் பதிலளித்துள்ளதாவது:

உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் நான் விளையாடுவேன் என எண்ணுகிறேன். அப்போது நான் பந்துவீசும்போது விராட் கோலி பேட்டிங் செய்தால் நான் ஒருபோதும் இதைச் செய்யமாட்டேன். என்னைக் கேள்வி கேட்டவர்களுக்காக இதை விளக்குகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.