நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முதல் இடத்தில் சிஎஸ்கே: பேட்டிங், கீப்பிங் என அனைத்திலும் அசத்திய தோனி (விடியோ)

தில்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி... 

News image
Updated On :2 மே 2019, 6:43 am

எழில்

தில்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் விளையாடிய சென்னை அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி கேபிட்டல் அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தோனி 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரெய்னா 59 ரன்களும் ஜடேஜா 25 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்கள். ஆனால் தில்லி அணி 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிஎஸ்கேவின் தாஹிர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவுக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்தன.

விடியோ 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.