பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சூப்பர் ஓவரில் ஹைதராபாத்தை வீழ்த்தி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்ற மும்பை! (விடியோ)

நேற்று  நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்திய மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது...

News image
Updated On :3 மே 2019, 5:12 am

எழில்

நேற்று  நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத்தை சூப்பர் ஓவரில் வீழ்த்திய மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்தது மும்பை. 2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 69 ரன்கள் எடுத்தார் டி காக்.

163 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத், 20 ஓவர்களின் முடிவில் 162 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் ஆட்டம் டை ஆகும் என்கிற நிலையில் பாண்டியாவின் பந்தை சிக்ஸர் அடித்து ஆச்சர்யப்படுத்தினார் மணீஷ் பாண்டே. மணிஷ் பாண்டே 2 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 71 ரன்களை விளாசினார்.

ஆட்டம் டை ஆனதால், சூப்பர் ஓவர் நடைபெற்றது. முதலில் ஹைதராபாத் பேட்டிங் செய்தது. 2 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் மட்டுமே குவித்தது. பும்ரா அற்புதமாகப் பந்துவீசி குறைந்த ரன்களே கொடுத்தார். இரண்டாவதாக ஆடிய மும்பை விக்கெட் இழப்பின்றி 9 ரன்களை எடுத்து வென்றது. ரஷித் கான் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார் பாண்டியா.  

புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்ற மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஹைதராபாத் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

விடியோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.