மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

ஐபிஎல் ஆட்டத்தில் தவறாக அளிக்கப்பட்ட நோ பால்: கோபத்தில் கதவை உடைத்த நடுவர்!

பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட காட்சியில் அது நோ பால் இல்லை எனத் தெரியவந்தது. இதனால்...

News image
Updated On :7 மே 2019, 11:07 am

எழில்

வழக்கமாக ஆட்டத்தின்போது வீரர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டால் நடுவர்கள் அந்த வீரர்களைப் பற்றி புகாரளித்து, தக்க தண்டனை கிடைக்க உதவுவார்கள். ஆனால் ஒரு நடுவரே விதிமுறைகளுக்கு எதிராக நடந்துகொண்டால்?

நடுவர் நிஜல் லாங், 56 டெஸ்ட், 123 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியவர். மே 4 அன்று பெங்களூரில் நடைபெற்ற ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் கள நடுவராக அவர் பணியாற்றினார். அந்த ஆட்டத்தில், கடைசி ஓவரில் உமேஷ் யாதவ்வுக்குத் தவறுதலாக நோ பால் அறிவித்தார். பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட காட்சியில் அது நோ பால் இல்லை எனத் தெரியவந்தது. இதனால் உமேஷ் யாதவும் விராட் கோலியும் நிஜல் லாங்கிடம் விவாதித்தார்கள். எனினும் இந்தத் தவறால் ஆர்சிபி அணிக்குப் பெரிய பாதிப்பில்லை. அந்த ஆட்டத்தில் ஆர்சிபி வென்றது. 

இந்தச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான நிஜல் லாங், நடுவர்களின் ஓய்வறைக்குச் சென்று கதவை வேகமாக எட்டி உதைத்துள்ளார். இதனால் கதவில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆட்ட நடுவர் நாராயண் குட்டியிடம் ஆலோசித்த கர்நாடக கிரிக்கெட் சங்கம், பிசிசிஐயின் சிஓஏ அமைப்பிடம் முறையிட்டது. 50 வயது நிஜல் லாங், சேதத்துக்கு ஈடான தொகையைத் தரும்படி பிசிசிஐ கூறியுள்ளது. இதையடுத்து ரூ. 5000 தொகையை கர்நாடக கிரிக்கெட் சங்கத்திடம் அளித்துள்ளார் நிஜல் லாங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.