47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மீண்டும் பொறுப்பில்லாமல் விளையாடிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்: இறுதிச்சுற்றில் மும்பை! (விடியோ)

இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது...

News image
Updated On :8 மே 2019, 5:49 am

எழில்

சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. அதன் வீரர் சூரியகுமார் யாதவ் அபாரமாக ஆடி 71 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார். 

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை சேர்த்தது சென்னை. 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களுடன் தோனியும், 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 42 ரன்களுடன் ராயுடுவும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த ஐபிஎல் போட்டியில் பல ஆட்டங்களில் சொதப்பியதுபோல இந்தமுறையும் சிஎஸ்கேவின் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி ரசிகர்களை ஏமாற்றினார்கள். இந்தமுறையும் தோனி வந்துதான் அணியைக் காப்பாற்றி ஓரளவு ரன்கள் சேர்த்துக்கொடுத்தார். 

18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது மும்பை. 10 பவுண்டரியுடன், 54 பந்துகளில் 71 ரன்களுடன் சூரியகுமார் யாதவும், 13 ரன்களுடன் ஹார்திக் பாண்டியாவும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.