ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் குறைந்த ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்: ஆர்ச்சர் புதிய சாதனை
ஐபிஎல் போட்டி வரலாற்றில் பவர்பிளே பகுதியில் ஆர்ச்சர் மட்டுமே குறைந்த ரன்களைக் கொடுத்துள்ளார்...


ஐபிஎல் போட்டியில் பவர்பிளே பகுதியில் குறைந்த ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர் என்கிற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் பெற்றுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறியுள்ள ராஜஸ்தான் அணியில் ஆல்ரவுண்டர் ஆர்ச்சர் 14 ஆட்டத்தில் விளையாடி 20 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 6.55. அதைவிடவும் பவர்பிளே பகுதியில் சிறப்பாகப் பந்துவீசி அசத்தியுள்ளார். இதன்மூலம் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் 2020: பவர்பிளே பகுதியில் ஆர்ச்சர்
விக்கெட்டுகள் - 10
எகானமி - 4.34
சராசரி - 11.30
ஐபிஎல் போட்டி வரலாற்றில் பவர்பிளே பகுதியில் குறைந்தது 15 ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர்களில், ஆர்ச்சர் மட்டுமே குறைந்த ரன்களைக் கொடுத்துள்ளார். இதற்கு முன்பு 2012-ல் சுனில் நரைன் பவர்பிளே பகுதியில் ஒரு ஓவருக்கு 4.5 ரன்கள் கொடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை ஆர்ச்சர் முறியடித்துள்ளார்.
ஐபிஎல்: பவர்பிளே பகுதியில் குறைந்த ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர்
ஆர்ச்சர் - 14 ஆட்டங்கள் - 10 விக்கெட்டுகள் - 4.34 எகானமி (2020)
சுனில் நரைன் - 14 ஆட்டங்கள் - 2 விக்கெட்டுகள் - 4.50 எகானமி (2012)
ஆர்ச்சர் - 11 ஆட்டங்கள் - 3 விக்கெட்டுகள் - 4.75 எகானமி 2019)
சுனில் நரைன் - 15 ஆட்டங்கள் - 3 விக்கெட்டுகள் - 4.86 எகானமி (2013)
முஸ்தாபிசுர் - 13 ஆட்டங்கள் - 3 விக்கெட்டுகள் - 4.93 எகானமி (2016)
ஸ்டெய்ன் - 16 ஆட்டங்கள் - 5 விக்கெட்டுகள் - 5 எகானமி (2013)
இந்த வருடம் மட்டுமல்லாமல் கடந்த வருடமும் பவர்பிளே பகுதியில் சிறப்பாகப் பந்துவீசிய ஆர்ச்சர் ஒரு ஓவருக்கு 4.75 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆனால் கடந்த வருடம் பவர்பிளேயில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே எடுத்த ஆர்ச்சர், இந்த வருடம் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
2020 ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆர்ச்சருக்கு மூன்றாம் இடம். 20 விக்கெட்டுகள். ஆனால் 25 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ள ரபாடா, பவர்பிளே பகுதியில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். கடைசி ஓவர்களில் தான் ரபாடா அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆர்ச்சரோ எப்போது பந்துவீச வந்தாலும் ரன்களைக் கட்டுப்படுத்தியதோடு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
ஆர்ச்சர் போன்ற ஒரு அற்புதமான பந்துவீச்சாளர் கிடைத்தும் அவருக்கு மற்ற வீரர்கள் சரியான ஒத்துழைப்பு வழங்காததால் பிளேஆஃப்புக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெறவில்லை. உண்மையிலேயே அந்த அணி வீரர்கள் வேதனைப்பட வேண்டிய விஷயம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...