ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆஸ்திரேலியாவில் எப்படி விளையாடுவார்?: ஐபிஎல் போட்டியில் ஏமாற்றிய பிரித்வி ஷா!

ஐபிஎல் போட்டியில் பிரித்வி ஷா மோசமாக விளையாடி வருவதால் ஆஸ்திரேலியாவில் அவர் எப்படி விளையாடுவார் என்கிற கேள்வி...

News image
Updated On :6 நவம்பர் 2020, 5:56 am

DIN

20 வயது பிரித்வி ஷா, இந்தியாவுக்காக 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணிக்காகத் தேர்வாகியுள்ளார்.

ஆனால் ஐபிஎல் போட்டியில் பிரித்வி ஷா மோசமாக விளையாடி வருவதால் ஆஸ்திரேலியாவில் அவர் எப்படி விளையாடுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் 2020 போட்டியின் நடுவில், சரியாக விளையாடாத காரணத்தால் பிரித்வி ஷாவை அணியிலிருந்து நீக்கியது தில்லி கேபிடல்ஸ். இருந்தும் அவர் திறமை மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பளித்தது. எனினும் தொடர்ந்து நம்பிக்கையில்லாமல் விளையாடி அணி நிர்வாகத்தையும் ரசிகர்களையும் வேதனைப்பட வைத்துள்ளார் பிரித்வி ஷா. 

இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிரித்வி ஷா, 228 ரன்கள் எடுத்துள்ளார். 2 அரை சதங்கள் மட்டும் எடுத்துள்ளவர் கடைசி 8 ஆட்டங்களில் மிக மோசமாக விளையாடியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 2-வது பந்திலேயே போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இவரை வைத்து என்ன செய்வது எனத் தடுமாறி வருகிறது தில்லி அணி.

இதுதவிர ஐபிஎல் ஆட்டங்களிலேயே இப்படி விளையாடுபவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் எப்படி விளையாடுவார் என்கிற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் இரு டெஸ்டுகளில் விளையாடிய பிரித்வி ஷா, ஒரு அரை சதம் மட்டும் எடுத்தார். சரியான ஃபார்மில் இல்லாததால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தச் சோதனையான காலக்கட்டத்திலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறார் பிரித்வி ஷா?

ஐபிஎல் போட்டியில் பிரித்வி ஷா: கடைசி 8 இன்னிங்ஸ்

0
9
10
7
0
0
4
19

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.