கடைசி ஐந்து ஆட்டங்களில் தோல்வி: ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறி ரசிகர்களை மீண்டும் ஏமாற்றிய ஆர்சிபி அணி!
இந்த முறையும் ஐபிஎல் கோப்பை நமக்கில்லை என்கிற சோகத்தில் உள்ளார்கள் ஆர்சிபி ரசிகர்கள்.


ஐபிஎல் போட்டியில் முதல் பத்து ஆட்டங்கள் வரை சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி, அடுத்த ஐந்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததால் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வெளியேற்றும் சுற்றில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸை வீழ்த்தியது.
முன்னதாக முதலில் பேட் செய்த பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள்சோ்த்தது. பின்னா் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.
இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதால் பெங்களூா் அணி போட்டியிலிருந்து வெளியேற நேரிட்டது. அதேநேரத்தில் பெங்களூரை வீழ்த்தியதன் மூலம் 2-ஆவது தகுதிச்சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ள ஹைதராபாத், அதில் தில்லி கேபிடல்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் அபுதாபியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
10 ஆட்டங்களின் முடிவில் 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்திருந்த ஆர்சிபி அணி, 14 ஆட்டங்களின் முடிவிலும் 14 புள்ளிகளே பெற்றது. எனினும் ஆரம்பத்தில் பெற்ற வெற்றிகளால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது.
ஐபிஎல் கோப்பையை வெல்ல அடுத்து தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களை ஆர்சிபி அணி வென்றாக வேண்டும் என்கிற நிலைமையில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று தோல்வியடைந்து தற்போது போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
இதனால் இந்த முறையும் ஐபிஎல் கோப்பை நமக்கில்லை என்கிற சோகத்தில் உள்ளார்கள் ஆர்சிபி ரசிகர்கள்.
எனினும் கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வரும் ஆர்சிபி அணி, இந்தமுறை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றிருப்பதே நல்ல முன்னேற்றம் தான் என்கிற ஆறுதலையும் பெற்றுள்ளார்கள்.
ஐபிஎல் 2020: ஆர்சிபி அணி
முதல் 10 ஆட்டங்கள்: 7 வெற்றிகள்
கடைசி 5 ஆட்டங்கள்: 5 தோல்விகள்
2016-ல் லீக் சுற்றின் முடிவில் 2-ம் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. 2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை.
2013 ஆண்டு முதல் ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி உள்ளார். இந்த எட்டு வருடங்களில் மூன்று முறை பிளேஆஃப்புக்கு ஆர்சிபி அணி தகுதி பெற்றுள்ளது.
அடுத்த வருடமாவது ஐபிஎல் கோப்பையை வெல்லுமா ஆர்சிபி அணி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...