பெண் குழந்தைக்குத் தந்தை ஆனார் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்
ஹைதராபாத் அணி கேப்டன் வார்னரும், நடராஜனுக்குக் குழந்தை பிறந்துள்ளதை நேற்றைய ஆட்டத்தின்போது...


தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன், பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.
2017-ல் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. அடுத்த வருடம் சன்ரைசர்ஸ் அணி ரூ. 40 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகச்சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசி அனைவர் கவனத்தையும் கவர்ந்தார் நடராஜன். 14 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
2018 ஜூன் மாதம் பவித்ராவைத் திருமணம் செய்தார் நடராஜன். இந்நிலையில் நடராஜன் - பவித்ரா தம்பதியருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹைதராபாத் அணி கேப்டன் வார்னரும், நடராஜனுக்குக் குழந்தை பிறந்துள்ளதை நேற்றைய ஆட்டத்தின்போது தெரிவித்தார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் நடராஜனுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...