வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

டி20 ஆட்டங்களில் இந்த மாற்றங்கள் தேவை: ஷேன் வார்னே முன்வைக்கும் யோசனைகள்

ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரிகளின் அளவு பெரிதாக இருக்கவேண்டும்...

News image
Updated On :2 அக்டோபர் 2020, 9:47 am

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10 அன்று நிறைவுபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக உள்ள ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வார்னே, டி20 ஆட்டங்களில் மாற்றங்கள் தேவை என்று சில யோசனைகளைக் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

டி20 கிரிக்கெட்டைக் கீழ்கண்ட முறைகளில் மாற்றம் கொண்டுவர விரும்புகிறேன்.

1. ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரிகளின் அளவு பெரிதாக இருக்கவேண்டும். சிறிய மைதானங்களில் ஆடுகளங்களில் அதிக புற்கள் இருக்கவேண்டும்.

2. ஒவ்வொரு பந்துவீச்சாளரும் நான்கு அல்ல அதிகபட்சமாக ஐந்து ஓவர்கள் வீசவேண்டும்.

3. பேட்ஸ்மேனுக்குச் சாதகமாக ஆடுகளம் இருக்கக் கூடாது. டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆடுகளம் போல இருக்கவேண்டும்.

பந்துக்கும் பேட்டுக்கும் இடையே போட்டி இருக்கவேண்டும். சிக்ஸர்கள் மட்டுமே தேவையில்லை என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.