பூரண் அதிரடி வீண்: பஞ்சாப் படுதோல்வி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
13-வது ஐபிஎல் சீசனின் 22-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.
202 ரன்கள் என்ற கடின இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. இந்த சீசனில் சிறப்பான தொடக்கம் அளித்து வந்த கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வாலுக்கு இந்த முறை தொடக்கம் மோசமாக அமைந்தது. அகர்வால் 2 ஓவரிலேயே 9 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இந்த ஆட்டத்தில் 3-வது வீரராக மந்தீப் சிங்குக்குப் பதில் சிம்ரன் சிங் களமிறக்கப்பட்டார். அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து கேப்டனுடன் இணைந்த நிகோலஸ் பூரண் சிக்ஸர்களாக அடித்து அதிரடி காட்டத் தொடங்கினர். ஆனால், ராகுல் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து, பூரண் சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினார். அப்துல் சமத் வீசிய 9-வது ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் உள்பட 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 28 ரன்கள் எடுத்து மிரட்டினார் பூரண். இதன்மூலம், தனது 17-வது பந்திலேயே அவர் அரைசதத்தை எட்டினார்.

அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 7 ரன்கள், மந்தீப் சிங் 6 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க பஞ்சாப் அணி பரிதாப நிலைக்கு உள்ளானது.
கடைசி நம்பிக்கை பேட்ஸமேனாக பூரண் மட்டுமே இருந்தார். இதனால், அவருக்கு நெருக்கடி இருந்தது. இந்த நிலையில் தனது கடைசி ஓவரை வீச ரஷித் கான் வந்தார். எதிர்முனையில் பந்துவீச்சாளர் என்பதால், ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் ரன் எடுப்பதை தவிர்த்தார் பூரண். விளைவு 5-வது பந்தில் பூரண் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, ஷிமி (0), காட்ரெல் (0), அர்ஷ்தீப் (0) என ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 16.5 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம், ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
ஹைதராபாத் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், நட்ராஜன் மற்றும் கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...