காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெயில் விளையாட இருந்தார்: அனில் கும்ப்ளே தகவல்

பஞ்சாப் அணி தொடக்க வீரர்களாக ராகுலும் மயங்க் அகர்வாலும் சிறப்பாக விளையாடி வருவதால்...

News image
Updated On :9 அக்டோபர் 2020, 12:14 pm

DIN

ஒருநாள், டி20 ஆட்டங்களில் சிறந்த வீரராக அறியப்படும் கிறிஸ் கெயில், 103 டெஸ்டுகளில் விளையாடி 7,000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளார். 301 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 2009 முதல் விளையாடி வருகிறார். பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள கெயில், இந்த வருடம் இதுவரை ஓர் ஆட்டத்திலும் விளையாடவில்லை. 

ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கெயில் ஆடவிருந்ததாக அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார். ஸ்டார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 41 வயது கெயில் விளையாடவிருந்தார். ஆனால் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விளையாட முடியாமல் போய்விட்டது என்றார்.

பஞ்சாப் அணி தொடக்க வீரர்களாக ராகுலும் மயங்க் அகர்வாலும் சிறப்பாக விளையாடி வருவதால் கெயிலால் இதுவரை விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.