காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஐபிஎல்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ராகுல், ரபாடா!

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில்...

News image
Updated On :10 அக்டோபர் 2020, 8:15 am

DIN

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முறையே கே.எல். ராகுலும் ரபாடாவும் முன்னிலை வகிக்கிறார்கள்.

ஐபிஎல் போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 5-வது வெற்றியைப் பெற்ற தில்லி அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

முன்னதாக முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவா்களில் 138 ரன்களுக்கு சுருண்டது. தில்லி தரப்பில் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா். தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி தொடர்ந்து 7-ம் இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

அதிக ரன்கள்: ஐபிஎல் 2020

1. கே.எல். ராகுல் (பஞ்சாப்) - 313
2. டு பிளெசிஸ் (சென்னை) - 299
3. மயங்க் அகர்வால் (பஞ்சாப்) - 281
4. பேர்ஸ்டோவ் (ஹைதராபாத்) - 241
5. டேவிட் வார்னர் (ஹைதராபாத்) - 227

Story image

அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் தில்லி வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

அதிக விக்கெட்டுகள்: ஐபிஎல் 2020

1. ரபாடா (தில்லி) - 15
2. பும்ரா (மும்பை) - 11
3. டிரெண்ட் போல்ட் (மும்பை) - 11
4. ஜேம்ஸ் பேட்டின்சன் (மும்பை) - 9
5. ஷமி (பஞ்சாப்) - 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.