சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

சார்ஜாவில் ஆர்சிபி சுழல்: 82 ரன்களில் கொல்கத்தா படுதோல்வி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 195 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்து 82 ரன்களில் தோல்வியடைந்தது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 5:44 pm

DIN


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 195 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்து 82 ரன்களில் தோல்வியடைந்தது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. இந்த முறை தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மன் கில்லுடன் அறிமுக வீரர் டாம் பாண்டன் களமிறங்கினார். அவர் சரியான டைமிங் கிடைக்காமல் திணற 12 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சைனி பந்தில் போல்டானார்.

சிராஜ் வீசிய 5-வது ஓவரில் மட்டும் 16 ரன்கள் கிடைக்க, பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பிறகு, கொல்கத்தாவுக்கு சரிவுதான். நிதிஷ் ராணா 9 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் பந்தில் போல்டானார். இவரைத் தொடர்ந்து, கில் 34 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரிலேயே கேப்டன் கார்த்திக் 1 ரன்னுக்கு சஹால் பந்தில் போல்டானார். அதற்கு அடுத்த ஓவரில் மார்கன் 8 ரன்களுக்கு சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரஸலும், திரிபாதியும் மட்டுமே இருந்தனர். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 16 ஆக இருந்ததால், இருவருக்கும் மிகப் பெரிய நெருக்கடி இருந்தது.

இந்த நிலையில் உடானா வீசிய 14-வது ஓவரை பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி என அதிரடியுடன் தொடங்கினார் ரஸல். ஆனால், இதற்கு அடுத்த பந்திலேயே அவரும் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் (1), திரிபாதி (16), நாகர்கோடி (4) என வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதன்மூலம், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்து 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நடு ஓவர்களில் வாஷிங்டன் சுந்தரும், சஹாலும் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியது.

பெங்களூரு தரப்பில் வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், இசுரு உடானா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.