ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லவுள்ள நான்கு அணிகள்: அஜித் அகர்கரின் கணிப்பு
ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லவுள்ள நான்கு அணிகள் குறித்து...


ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லவுள்ள நான்கு அணிகள் குறித்து முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தன்னுடைய கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் அனைத்து அணிகளும் தற்போது தலா 7 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இந்நிலையில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லவுள்ள நான்கு அணிகள் குறித்து முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கூறியதாவது:
இந்த வருடம் போட்டி பலமாக உள்ளது. மும்பை, தில்லி அணிகள் மற்ற அணிகளை விடவும் சிறப்பாக விளையாடி வருகின்றன. சிஎஸ்கே அணிக்கு எதிராக கேகேஆர் அணி ஆச்சர்யமான வெற்றியைப் பெற்றது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் மூன்றாவது அணியாக கொல்கத்தாவைச் சொல்வேன். நான்காவது அணியாக ராஜஸ்தான் அல்லது ஹைதராபாத் இருக்கலாம்.
போட்டி ஆரம்பிக்கும் முன்பு சிஎஸ்கேவைச் சொன்னேன். ஆனால் இந்த இரு அணிகளும் தற்போது சிஎஸ்கேவை விடவும் நன்கு விளையாடி வருகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...