10 முறை 100 ரன்கள் கூட்டணி அமைத்த முதல் ஜோடி: கோலி - டி வில்லியர்ஸ் சாதனை
ஐபிஎல் போட்டியில் கூட்டணி அமைத்து 3000 ரன்கள் எடுத்த முதல் ஜோடி என்கிற பெருமையையும்...


ஐபிஎல் போட்டியில் 10 முறை 100 ரன்கள் கூட்டணி அமைத்த முதல் ஜோடி என்கிற பெருமையை பெங்களூர் அணியைச் சேர்ந்த கோலி - டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றது.
இந்த ஆட்டத்தில் கோலியும் டிவில்லியர்ஸும் 47 ரன்களில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் 10 முறை 100 ரன்கள் கூட்டணி அமைத்த முதல் ஜோடி என்கிற பெயரை இருவரும் பெற்றுள்ளார்கள். இதற்கு முன்பு கோலியும் கிறிஸ் கெயிலும் 9 முறை 100 ரன்கள் கூட்டணி அமைத்திருந்ததே சாதனையாக இருந்தது.
மேலும் ஐபிஎல் போட்டியில் கூட்டணி அமைத்து 3000 ரன்கள் எடுத்த முதல் ஜோடி என்கிற பெருமையையும் கோலி - டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார்கள். கோலி - கெய்ல் கூட்டணி இதற்கு அடுத்ததாக 2782 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் அதிக 100 ரன்கள் கூட்டணி அமைத்தவர்கள்
10 கோலி - டி வில்லியர்ஸ்
9 கோலி - கெய்ல்
6 தவன் - வார்னர்
5 பேர்ஸ்டோவ் - வார்னர்
5 கம்பீர் - உத்தப்பா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...