ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: 3-ம் இடத்துக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ள ஆர்சிபி அணி!
கொல்கத்தா அணிக்கு எதிரான பெரிய வெற்றியால் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது...


கொல்கத்தா அணிக்கு எதிரான பெரிய வெற்றியால் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது கோலி தலைமையிலான ஆர்சிபி அணி.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது கோலி தலைமையிலான ஆர்சிபி அணி.
புள்ளிகள் பட்டியல்
| வரிசை | அணிகள் | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
| 1. | மும்பை | 7 | 5 | 2 | 10 | +1.327 |
| 2. | தில்லி | 7 | 5 | 2 | 10 | +1.038 |
| 3. | பெங்களூர் | 7 | 5 | 2 | 10 | -0.116 |
| 4. | கொல்கத்தா | 7 | 4 | 3 | 8 | -0.577 |
| 5. | ஹைதராபாத் | 7 | 3 | 4 | 6 | +0.153 |
| 6. | ராஜஸ்தான் | 7 | 3 | 4 | 6 | -0.872 |
| 7. | சென்னை | 7 | 2 | 5 | 4 | -0.588 |
| 8. | பஞ்சாப் | 7 | 1 | 6 | 2 | -0.381 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...