வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ரன்கள் அடிக்கத் திணறும் பேட்ஸ்மேன்கள்: பலனை அனுபவிக்கும் ஆர்சிபி!
2018 ஐபிஎல் ஏலத்தில் அவரை ரூ. 3.20 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி.


தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். 2018 ஐபிஎல் ஏலத்தில் அவரை ரூ. 3.20 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி.
2018-ல் 7 ஆட்டங்களிலும் 2019-ல் 3 ஆட்டங்களிலும் மட்டுமே விளையாடினார் வாஷிங்டன். பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான பெங்களூர் மைதானத்தில் விளையாடி, நிறைய ரன்கள் கொடுத்ததால் கடந்த இரு வருடங்களாக வாஷிங்டனை கோலி அதிகமாகப் பயன்படுத்தவில்லை. ஆனால் இந்தமுறை ஆர்சிபி அணியின் பெரும்பலமாக விளங்கி வருகிறார் வாஷிங்டன் சுந்தர்.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி எந்த ஒரு ஆட்டத்திலும் 20 ரன்களுக்கு அதிகமாகக் கொடுக்கவில்லை. அதுவும் பவர்பிளேயில் இவர் குறைந்தது 2 ஓவர்களாவது வீசுவதால் எதிரணியால் அதிக ரன்கள் குவிக்க முடியாமல் போய்விடுகிறது. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 5 விக்கெட்டுகள் எடுத்துள்ள வாஷிங்டன், 4.90 எகானமி வைத்து அசத்தியுள்ளார். இந்த வருடம், குறைந்தது 4 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள வீரர்களில் குறைந்த எகானமி கொண்ட பந்துவீச்சாளர் இவர்தான்.
ஐபிஎல் 2020: வாஷிங்டன் சுந்தர்
0/7 - 1 ஓவர்
0/13 - 2 ஓவர்கள்
1/12 - 4 ஓவர்கள்
0/20 - 4 ஓவர்கள்
0/20 - 4 ஓவர்கள்
2/16 - 3 ஓவர்கள்
2/20 - 4 ஓவர்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...