ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: மும்பையைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த தில்லி அணி!
மும்பை அணியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது தில்லி அணி.


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை 13 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸ் வீழ்த்தியது. இதனால் புள்ளிகள் பட்டியலில் அந்த அணி மீண்டும் முதலிடத்துக்கு வந்தது.
துபையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களே எடுத்து வீழ்ந்தது.
இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 57 ரன்கள் எடுத்தார் தவன். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக அரை சதங்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது தில்லி அணி.
புள்ளிகள் பட்டியல்
| வரிசை | அணிகள் | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
| 1. | தில்லி | 8 | 6 | 2 | 12 | +0.990 |
| 2. | மும்பை | 7 | 5 | 2 | 10 | +1.327 |
| 3. | பெங்களூர் | 7 | 5 | 2 | 10 | -0.116 |
| 4. | கொல்கத்தா | 7 | 4 | 3 | 8 | -0.577 |
| 5. | ஹைதராபாத் | 8 | 3 | 5 | 6 | +0.009 |
| 6. | சென்னை | 8 | 3 | 5 | 6 | -0.390 |
| 7. | ராஜஸ்தான் | 8 | 3 | 5 | 6 | -0.844 |
| 8. | பஞ்சாப் | 7 | 1 | 6 | 2 | -0.381 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...