ஐபிஎல் போட்டியில் அதிக அரை சதங்கள் எடுத்த இந்திய வீரர்: ஷிகர் தவன் சாதனை
ஐபிஎல் போட்டியில் அதிக அரை சதங்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையை ஷிகர் தவன் படைத்துள்ளார்.


ஐபிஎல் போட்டியில் அதிக அரை சதங்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையை ஷிகர் தவன் படைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை 13 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸ் வீழ்த்தியது. இதனால் புள்ளிகள் பட்டியலில் அந்த அணி மீண்டும் முதலிடத்துக்கு வந்தது.
துபையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களே எடுத்து வீழ்ந்தது.
இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 57 ரன்கள் எடுத்தார் தவன். இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக அரை சதங்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஐபிஎல்: அதிக அரை சதங்கள் எடுத்த இந்திய வீரர்கள்
ஷிகர் தவன் - 39 அரை சதங்கள்
கோலி - 38 அரை சதங்கள்
ரோஹித் சர்மா - 38 அரை சதங்கள்
சுரேஷ் ரெய்னா - 38 அரை சதங்கள்
ஐபிஎல் போட்டியில் அதிக அரை சதங்கள் எடுத்த வீரராக டேவிட் வார்னர் உள்ளார். அவர் இதுவரை 46 அரை சதங்கள் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...