இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஐபிஎல்: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் தினேஷ் கார்த்திக்!

பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேகேஆர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார்...

News image
Updated On :16 அக்டோபர் 2020, 9:09 am

DIN

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இதையடுத்து இங்கிலாந்து கேப்டனான இயன் மார்கன் கேப்டனாகத் தேர்வாகியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் 7 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேகேஆர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இதையடுத்து அணியின் துணை கேப்டனான இயன் மார்கன், கேப்டனாகத் தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் மார்கன் தலைமையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. 

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 5.25 கோடிக்கு மார்கனைத் தேர்வு செய்தது கேகேஆர் அணி. 7 ஆட்டங்களில் 108 ரன்கள் மட்டும் எடுத்ததால் தினேஷ் கார்த்திக் இந்த முடிவை எடுத்துள்ளார். கேகேஆர் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தினேஷ் கார்த்திக்கின் இந்த முடிவில் நாங்கள் ஆச்சர்யமடைந்துள்ளோம். எனினும் அவருடைய முடிவுக்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம். அணியை வழிநடத்த மார்கன் ஒப்புக்கொண்டது எங்கள் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.