இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: ஆர்சிபி அணியை வீழ்த்தி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள பஞ்சாப் அணி!

பஞ்சாப் அணியின் வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

News image
ராகுல் - கெயில்
Updated On :16 அக்டோபர் 2020, 5:22 am

DIN


ஆர்சிபி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றுள்ளது.

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய பஞ்சாப் அணி கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து இலக்கை அடைந்தது. அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக கோலி 48 ரன்களும் பஞ்சாப் அணியில் ராகுல் 61 ரன்களும் கெயில் 53 ரன்களும் எடுத்தார்கள்.

பஞ்சாப் அணியின் வெற்றியால் புள்ளிகள் பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பெங்களூர் அணி தொடர்ந்து 3-ம் இடத்திலும் பஞ்சாப் அணி கடைசி இடத்திலும் உள்ளன. இந்த வெற்றியின் மூலம் புதிய நம்பிக்கையுடன் அடுத்த ஆட்டங்களில் பஞ்சாப் அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. தில்லி 8 6 2 12 +0.990
 2. மும்பை 7 5 2 10 +1.327
 3. பெங்களூர்  8 5 3 10 -0.139
 4. கொல்கத்தா 7 4 3 8 -0.577
 5. ஹைதராபாத்  8 3 5 6 +0.009
 6. சென்னை 8 3 5 6 -0.390
 7. ராஜஸ்தான்  8 3 5 6 -0.844
 8. பஞ்சாப் 8 2 6 4 -0.295

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.