இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அதிவேக 50 ஐபிஎல் விக்கெட்டுகள்: நரைனின் சாதனையை முறியடிப்பாரா ரபாடா?

ஐபிஎல் போட்டியில் குறைந்த ஆட்டங்களில் 50 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்கிற பெருமையை...

News image
Updated On :17 அக்டோபர் 2020, 6:45 am

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டியில் தில்லி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.

தில்லி அணியின் இந்த நிலைக்கு வேகப்பந்து வீச்சாளர் ரபாடா முக்கியக் காரணம். 8 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் குறைந்த ஆட்டங்களில் 50 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்கிற பெருமையை அவர் விரைவில் அடையவுள்ளார்.

ஐபில் போட்டியில் 50 விக்கெட்டுகளை குறைந்த ஆட்டங்களில் அதாவது 32 ஆட்டங்களில் எடுத்து சாதனை புரிந்தவர் கொல்கத்தா அணியின் சுனில் நரைன். இந்நிலையில் இந்தச் சாதனையை சிஎஸ்கேவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலோ அல்லது அடுத்த ஆட்டத்திலோ ரபாடா வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 26 ஆட்டங்களில் 49 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ரபாடா. இதனால் அதிவேக 50 ஐபிஎல் விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்கிற சாதனையை விரைவில் நிகழ்த்தவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.