தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காயம் காரணமாக சென்னை அணியிலிருந்து விலகினார் பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image
சென்னை அணி வீரர் பிராவோ
Updated On :21 அக்டோபர் 2020, 1:51 pm

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராகவும், ஆல்ரவுண்டராகவும் இருப்பவர் டுவைன் பிராவோ. இந்நிலையில் தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து பிராவோ விலகுவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆரம்பம் முதல் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வரும் சென்னை அணிக்கு பிராவோவின் விலகல் மேலும் சறுக்கலைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முதல் மூன்று போட்டிகளில் களமிறக்கப்படாத பிராவோ இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

காயம் காரணமாக தில்லி அணிக்கு எதிரான போட்டியில் பிராவோ இறுதிஓவர் வீச முடியாததால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. தற்போது பிராவோவின் விலகல் சென்னை அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சுரேஷ் ரெய்னா அதனைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.