தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிஎஸ்கே அணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்: ரசிகர்களிடம் பிராவோ வேண்டுகோள்!

மிகச்சிறந்த அணியின் ரசிகராகவும் வீரராகவும் இருப்பதில் நாம் பெருமை கொள்ளவேண்டும்..

News image
Updated On :22 அக்டோபர் 2020, 10:41 am

DIN

சிஎஸ்கே அணிக்கு அதன் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டும் என்று ஆல்ரவுண்டர் பிராவோ கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியிலிருந்து காயம் காரணமாக சிஎஸ்கே அணி வீரர் பிராவோ விலகியுள்ளார். இந்த வருடம் ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ள பிராவோ, 6 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி ரேட் - 8.57. பேட்டிங்கில் ஏழு ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கிளம்பும் முன்பு ரசிகர்களிடம் சில கருத்துகளை பிராவோ தெரிவித்துள்ளார். விடியோவில் அவர் கூறியதாவது:

எனது அணியை விட்டு விலகுவது வேதனையாக உள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் அனைவரும் அவர்களுடைய அணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கவேண்டும். நாங்களும் ரசிகர்களும் எதிர்பார்த்தது போல இந்த வருடம் அமையவில்லை. எங்களுடைய சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினோம். எனினும் நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆதரவு அளியுங்கள். ஒரு சாம்பியன் போல நாங்கள் வலுவாகத் திரும்ப வருவோம். ஐபிஎல் போட்டியில் மிகச்சிறந்த அணியின் ரசிகராகவும் வீரராகவும் இருப்பதில் நாம் பெருமை கொள்ளவேண்டும் என்றார். 

மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி அடுத்ததாக வெள்ளியன்று மும்பைக்கு எதிராக விளையாடவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.