புள்ளிகள் பட்டியல்: அட்டகாசமான வெற்றியால் ஐபிஎல் போட்டியை மேலும் சுவாரசியப்படுத்தியுள்ள ஹைதராபாத்
ஹைதராபாத் அணியின் இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் போட்டி மேலும் சுவாரசியமாகியுள்ளது.


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ஹைதராபாத் அணி பிளேஆஃப் சுற்று வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
முன்னதாக, முதலில் பேட் செய்த சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய தில்லி அணி 19 ஓவா்களில் 131 ரன்களுக்கு சுருண்டது. புள்ளிகள் பட்டியலில் தில்லி அணி 3-ம் இடத்திலும் ஹைதராபாத் அணி 6-ம் இடத்திலும் உள்ளன.
ஹைதராபாத் அணியின் இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் போட்டி மேலும் சுவாரசியமாகியுள்ளது. ஏழு அணிகள் குறைந்தபட்சம் 10 புள்ளிகளைப் பெற்று பிளேஆப்புக்குப் போட்டியிடுகின்றன. இதுவரை எந்தவொரு அணியும் பிளேஆஃப்புக்குத் தேர்வாகவில்லை.
புள்ளிகள் பட்டியல்
| வரிசை | அணிகள் | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
| 1. | மும்பை | 11 | 7 | 4 | 14 | +1.252 |
| 2. | பெங்களூர் | 11 | 7 | 4 | 14 | +0.092 |
| 3. | தில்லி | 12 | 7 | 5 | 14 | +0.030 |
| 4. | பஞ்சாப் | 12 | 6 | 6 | 12 | -0.049 |
| 5. | கொல்கத்தா | 12 | 6 | 6 | 12 | -0.479 |
| 6. | ஹைதராபாத் | 12 | 5 | 7 | 10 | +0.396 |
| 7. | ராஜஸ்தான் | 12 | 5 | 7 | 10 | -0.505 |
| 8. | சென்னை | 12 | 4 | 8 | 8 | -0.602 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...