கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இந்த வெற்றி ரசிகர்களுக்கானது: கடைசி இரு பந்துகளிலும் சிக்ஸர்கள் அடித்த ஜடேஜா

கடைசி 12 பந்துகளில் பெரிதாக யோசிக்க முடியாது. பந்தைப் பார்த்து அடிக்க வேண்டும்.

News image
Updated On :30 அக்டோபர் 2020, 8:33 am

DIN

கொல்கத்தாவுக்கு எதிரான வெற்றி சிஎஸ்கே ரசிகர்களுக்கானது என ஜடேஜா கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் அடித்து உதவ, ஜடேஜா அதிரடியாக 31 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார் ஜடேஜா. கடைசி ஓவரில் கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்கிற இக்கட்டான நிலைமையில் இரு சிக்ஸர்கள் அடித்து சிஎஸ்கே அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.  

சிஎஸ்கேவின் வெற்றிக்குப் பிறகு ட்வீட் செய்த ஜடேஜா கூறியதாவது:

இந்த வெற்றி ரசிகர்களுக்கானது. தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு நன்றி என்றார். பிறகு ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: வலைப்பயிற்சியில் நன்றாக விளையாடுகிறேன். அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பேன். அதனால் ஆட்டத்திலும் என்னால் அதேபோல விளையாட முடிகிறது. கடைசி 12 பந்துகளில் பெரிதாக யோசிக்க முடியாது. பந்தைப் பார்த்து அடிக்க வேண்டும். அவ்வளவுதான். எனக்கென்று உள்ள வட்டத்தில் பந்து வீசினால் என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.