ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வலி குறைந்து விட்டது: அஸ்வின் தகவல்

ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது வலி இருந்தது. ஆனால் தற்போது வலி குறைந்துள்ளது.

News image
Updated On :22 செப்டம்பர் 2020, 5:12 am

DIN

தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் உண்டான வலி தற்போது குறைந்துள்ளதாக தில்லி அணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது தில்லி கேபிடல்ஸ். ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. பின்னா், ஆடிய பஞ்சாப் அணியும் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சோ்க்க ஆட்டம் டையானது. இதையடுத்து, நடைபெற்ற சூப்பா் ஓவரில் தில்லி அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஒரு ஓவர் மட்டும் வீசிய தில்லி வீரர் அஸ்வின், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எனினும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஃபீல்டிங் செய்ய முயன்றபோது கீழே விழுந்தார். இதனால் அவருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். பிறகு அவர் மீண்டும் விளையாட வரவில்லை.

அஸ்வின் நிலைமை பற்றி தில்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது: அஸ்வின் ஓவரால் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகிவிடுவேன் என அஸ்வின் கூறியுள்ளார். ஆனால் அதைப் பற்றி அணியின் பிசியோ தான் முடிவு செய்வார் என்றார்.

இந்தக் காயத்தால் ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்படலாம் எனப் பலரும் அச்சுறுத்திய நிலையில் காயத்தால் உண்டான வலி குறைந்துள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஆடுகளத்தை விட்டு வெளியேறும்போது வலி இருந்தது. ஆனால் தற்போது வலி குறைந்துள்ளது. ஸ்கேன் பரிசோதனை முடிவுகளும் உற்சாகப்படுத்துகின்றன. அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.