பிரித்வி ஷா, தவான் மிரட்டல் ஆட்டம்: டெல்லி அபார வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
14-வது ஐபிஎல் சீசனின் 2-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது.
189 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இருவரும் தலா 1 பவுண்டரி அடித்து அதிரடியுடன் இன்னிங்ஸைத் தொடங்கினர்.
குறிப்பாக ஷர்துல் தாக்குர் வீசிய 5-வது ஓவரில் தவான் 1 பவுண்டரி, பிரித்வி ஷா ஹாட்ரிக் பவுண்டரி விளாச மொத்தம் 17 ரன்கள் கிடைத்தன. இதனால், அந்த அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்தது.
பவர் பிளே ஓவர்களுக்குப் பிறகும் அதிரடி காட்ட ரன் ரேட் ஓவருக்கு 9-க்கு மேல் நீடித்தது. பிரித்வி 27-வது பந்திலும், தவான் 35-வது பந்திலும் அடுத்தடுத்து அரைசதத்தை எட்டினர்.
அரைசதம் அடித்தும் பவுண்டரிகள் பறக்க ரன் ரேட் ஓவருக்கு 10-க்கு மேல் கடந்தது. 13 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 136 ரன்கள் சேர்த்தது.
இந்த நிலையில், பிரித்வி 72 ரன்களுக்கு (38 பந்துகள்) பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் ரிஷப் பந்த் முன்கூட்டியே களமிறங்கினார். விக்கெட் விழுந்தாலும் தவான் நாலாபுறமும் பந்தை பவுண்டரிக்கு விரட்டி வந்தார்.
இதனால், டெல்லியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.
இந்த நிலையில், ஷர்துல் 17-வது ஓவரை வீசினார். முதலிரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் தவான். ஆனால், 3-வது பந்தில் தவான் ஆட்டமிழந்தார். அவர் 54 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, பந்த் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் வெற்றி இலக்கை நோக்கி விளையாடினர். 3 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் ஸ்டாய்னிஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் அடுத்த பந்திலேயே பந்த் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்த டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பந்த் 12 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...