தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: தோல்வியடையாத ஒரே அணியான ஆர்சிபி முதல் இடத்தில்!

மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ள விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2021, 5:57 am

ஐபிஎல் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ள விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களே எடுத்தது. பெங்களூா் வீரா் டி வில்லியா்ஸ் ஆட்டநாயகன் ஆனாா்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தில்லி 18.2 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் அடித்து வென்றது. தில்லி வீரா் ஷிகா் தவன் ஆட்டநாயகன் ஆனாா்.

நேற்று வெற்றி பெற்ற பெங்களூர். தில்லி ஆகிய இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. இதுவரை தோல்வியடையாத ஒரே அணியான பெங்களூர் 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இதுவரை ஒரு வெற்றியும் பெறாத ஹைதராபாத் அணி, கடைசி இடத்திலும் உள்ளன.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. பெங்களூர் 3 3 0 6 +0.750
 2. தில்லி 3 2 1 4 +0.453
 3. மும்பை 3 2 1 4 +0.367
 4. சென்னை 2 1 1 2 +0.616
 5. ராஜஸ்தான்  2 1 1 2 +0.052
 6. கொல்கத்தா  3 1 2 2 -0.633
 7. பஞ்சாப்  3 1 2 2 -0.967
 8. ஹைதராபாத் 3 0 3 0 -0.483

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.