அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

200 சிக்ஸர்கள், 500 பவுண்டரிகள் சாதனைகளை நெருங்கும் சுரேஷ் ரெய்னா

ஐபிஎல் போட்டியில் 200 சிக்ஸர்கள் அடித்த 7-வது பேட்ஸ்மேன் என்கிற சாதனையை நெருங்கவுள்ளார் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா.

News image
Updated On :19 ஏப்ரல் 2021, 5:08 am

DIN

ஐபிஎல் போட்டியில் 200 சிக்ஸர்கள் அடித்த 7-வது பேட்ஸ்மேன் என்கிற சாதனையை நெருங்கவுள்ளார் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா.

ஐபிஎல் போட்டியில் 352 சிக்ஸர்களுடன் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் கிறிஸ் கெயில். ரோஹித் சர்மா, தோனி, கோலி ஆகிய இந்திய வீரர்கள் 200-ம்கும் அதிகமான சிக்ஸர்களை அடித்துள்ளார்கள். 

இந்நிலையில் 195 ஆட்டங்களில் 198 சிக்ஸர்கள் அடித்துள்ள சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா, ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 200 சிக்ஸர்கள் என்கிற இலக்கை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பவுண்டரிகள் எண்ணிக்கையிலும் அவர் சாதனையை நிகழ்த்த வாய்ப்புள்ளது. இதுவரை 497 பவுண்டரிகள் அடித்துள்ளார் ரெய்னா. இதுவரை ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவன் (615), வார்னர் (519), விராட் கோலி (512) ஆகிய வீரர்கள் மட்டுமே 500 பவுண்டரிகள் அடித்துள்ளார்கள். இன்னும் மூன்று பவுண்டரிகள் அடித்தால் சுரேஷ் ரெய்னாவும் 500 பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்து விடுவார்.

சின்னத் தல இரு சாதனைகளை இன்று நிகழ்த்துவாரா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.