புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சரிவிலிருந்து மீட்ட பந்த், ஹெட்மயர்: சென்னைக்கு 173 ரன்கள் இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 அக்டோபர் 2021, 3:52 pm

DIN


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபையர் 1 ஆட்டம் துபையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் மோதுகின்றன.

 டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். முதலிரண்டு ஓவர்களில் பிரித்வி அடக்கிவாசிக்க 3-வது ஓவரிலிருந்து தனது மிரட்டலைத் தொடங்கினார். ஆனால், ஜோஷ் ஹேசில்வுட் 4-வது ஓவரில் ஷிகர் தவான் (7) விக்கெட்டை வீழ்த்தினார். பிரித்வி தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்தினாலும், பவர் பிளே கடைசி ஓவரில் மீண்டும் ஷ்ரேயஸ் ஐயர் (1) விக்கெட்டை வீழ்த்தினார் ஹேசில்வுட்.

இதன்பிறகு, கேப்டன் ரிஷப் பந்த்-க்குப் பதில் அக்ஷர் படேல் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். அவர் நிதானம் காட்ட பிரித்வி தனது ஆட்டத்தைத் தொடர்ந்தார். அவர் 27-வது பந்தில் தனது அரைசதத்தை எட்டினார். 

இந்த நிலையில் அக்ஷர் (10) விக்கெட்டை மொயீன் அலி வீழ்த்தினார். அடுத்த ஓவரிலேயே அரைசதம் அடித்த பிரித்வி 60 ரன்களுக்கு ரவீந்திர ஜடேஜா சுழலில் சிக்கினார்.

80 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால், பந்த் மற்றும் ஷிம்ரோன் ஹெத்மயருக்கு ஆட்டத்தைக் கட்டமைக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது.

தவறான பந்துகளில் மட்டும் பவுண்டரி அடித்து இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரன் ரேட்டும் ஓவருக்கு 7-க்கு மேல் நீடித்து வந்தது.

15-வது ஓவரை நெருங்கியபோது அதிரடிக்கு மாறத் தொடங்கினர். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 8-ஐத் தாண்டத் தொடங்கியது.

எல்லா பந்துவீச்சாளர்கள் பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டியதால், அணியின் ஸ்கோர் 180-ஐத் தொடும் நிலை உருவானது. ஆனால், டுவைன் பிராவோ 19-வது ஓவரில் ஹெட்மயர் (37 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தி உதவினார்.

பந்த், ஹெட்மயர் இணை 5-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்தது.

இதன்பிறகு, கடைசி 8 பந்துகளை சென்னை சிறப்பாக வீசி டெல்லி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியது. குறிப்பாக ஷர்துல் தாக்குர் கடைசி ஓவரில் 8 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பந்த் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அரைசதத்தை எட்டினார்.

சென்னை தரப்பில் ஜேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.