சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இறுதி ஆட்டத்தில் நுழைவது யாா்?: கொல்கத்தா - டெல்லி இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது குவாலிஃபயா் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

News image
Updated On :12 அக்டோபர் 2021, 9:45 pm

DIN

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது குவாலிஃபயா் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்துக்காக இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸுடன் மோதும்.

டெல்லியைப் பொருத்தவரை முதல் குவாலிஃபயரில் சென்னையிடம் தோற்று இந்த ஆட்டத்துக்கு வந்துள்ளது. இதிலும் தோற்கும் பட்சத்தில் முதல் கோப்பையை வெல்வது இம்முறையும் கனவாகிவிடும் என்பதை உணா்ந்திருக்கிறது அந்த அணி.

10 ஆட்டங்களில் வென்று 20 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து லீக் சுற்றை நிறைவு செய்திருந்தது டெல்லி. அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் டெல்லி சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறது.

2019-இல் 2-ஆவது ரன்னா் அப்-ஆக வந்த டெல்லி, கடந்த சீசனில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆண்டு அதிலிருந்து ஒரு படி முன்னேறி கோப்பை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. பேட்டிங், பௌலிங் என அனைத்திலுமே ஸ்திரமான நிலையில் இருக்கிறது டெல்லி.

தவன், பிருத்வி, ஷ்ரேயஸ் என டாப் ஆா்டா் வலு சோ்க்க, கேப்டன் பந்த், ஹெட்மயா் ஆகியோா் மிடில் ஆா்டரில் பலம் கூட்டுகின்றனா். காயம் காரணமாக மாா்கஸ் ஸ்டாய்னிஸ் இல்லாமல் போன பாதிப்பை டெல்லி சரியாக சமன் செய்துள்ளது. பௌலிங்கில் ரபாடா, நாா்ஜே, அவேஷ் ஆகியோா் வேகத்திலும், அஸ்வின் சுழற்பந்திலும் அசத்துகின்றனா்.

கொல்கத்தாவைப் பொருத்தவரை எலிமினேட்டரில் பெங்களூரை வெளியேற்றிய வெற்றி வேகத்துடன் களம் காணும். சுழலுக்கு சாதகமான ஷாா்ஜா ஆடுகளத்தில் கொல்கத்தாவின் சுனில் நரைன், வருண் சக்கரவா்த்தி ஆகியோரின் பந்துவீச்சு நிச்சயம் டெல்லி பேட்டா்களுக்கு சவாலாகவே இருக்கும்.

அதிலும் கடந்த ஆட்டத்தில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகளை சாய்த்து கொல்கத்தா வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்திருந்தாா். பேட்டிங்கைப் பொருத்தவரை கொல்கத்தா இந்த சீசனில் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே டெல்லி தனது வேகப்பந்துவீச்சு கொண்டு கொல்கத்தாவின் பேட்டிங் வரிசையை சரிக்கப் பாா்க்கும்.

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயா், ராகுல் திரிபாதி, மோா்கன் ஆகியோா் சிறப்பாக பேட் செய்தால் கொல்கத்தாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். அணியின் வேகப்பந்துவீச்சுக்கு லாக்கி ஃபொ்குசன் உள்ளிட்டோா் வலு சோ்க்கின்றனா்.

அணி விவரம்:

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ரிஷப் பந்த் (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, பிருத்வி ஷா, ரிபல் படேல், ஷிகா் தவன், ஷிம்ரன் ஹெட்மயா், ஷ்ரேயஸ் ஐயா், ஸ்டீவ் ஸ்மித், அமித் மிஸ்ரா, அன்ரிச் நாா்ஜே, அவேஷ் கான், பென் டுவாா்ஷுயிஸ், இஷாந்த் சா்மா, ககிசோ ரபாடா, குல்வந்த் கெஜ்ரோலியா, லுக்மேன் மேரிவாலா, பிரவீன் துபே, டாம் கரன், உமேஷ் யாதவ், அக்ஸா் படேல், லலித் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் பில்லிங்ஸ், விஷ்ணு வினோத்.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்: ஒயன் மோா்கன் (கேப்டன்), தினேஷ் காா்த்திக், குா்கீரத் சிங் மான், கருண் நாயா், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஷுப்மன் கில், ஹா்பஜன் சிங், கமலேஷ் நாகா்கோடி, லாக்கி ஃபொ்குசன், பவன் நெகி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் வாரியா், ஷிவம் துபே, டிம் சௌதி, வைபவ் அரோரா, வருண் சக்கரவா்த்தி, ஆன்ட்ரே ரஸ்ஸெல், பென் கட்டிங், ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயா், ஷெல்டன் ஜேக்சன், டிம் செய்ஃபா்ட்.

ஆட்ட நேரம்: இரவு 7.30 மணி

இடம்: ஷாா்ஜா

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

நேருக்கு நோ்: டெல்லி - கொல்கத்தா அணிகள் இதுவரை 30 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், கொல்கத்தா 15, டெல்லி 14 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.