மீண்டது மும்பை
பஞ்சாப் கிங்ஸýக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர் தோல்வியிலிருந்து மீண்டது மும்பை.


பஞ்சாப் கிங்ஸýக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர் தோல்வியிலிருந்து மீண்டது மும்பை.
அபுதாபியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மும்பை 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் அடித்து வென்றது.
டாஸ் வென்ற மும்பை ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் தொடக்க வீரர்களில் முதல் விக்கெட்டாக 15 ரன்கள் சேர்த்திருந்த மன்தீப் சிங் வீழ்ந்தார். அடுத்து கிறிஸ் கெயில் 1 ரன்னில் வெளியேற, எய்டன் மார்க்ரம் நிலைத்து ஆடி ரன்கள் சேகரிக்கத் தொடங்கினார்.
மறுபுறம் 21 ரன்கள் சேர்த்து கேப்டன் கே.எல். ராகுல் ஆட்டமிழந்தார். பின்னர் நிகோலஸ் பூரன் 2 ரன்களுக்கு நடையைக் கட்ட, அதிரடியாக 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்திருந்த எய்டன் மார்க்ரமை 16-ஆவது ஓவரில் பெளல்டாக்கினார் ராகுல் சாஹர்.
6-ஆவது வீரராக வந்த தீபக் ஹூடா 28 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். ஓவர்கள் முடிவில் ஹர்பிரீத் பிரார் 14, நேதன் எல்லிஸ் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை தரப்பில் பொல்லார்ட், பும்ரா ஆகியோர் தலா 2, கிருணால், ராகுல் சாஹர் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
பின்னர் ஆடிய மும்பை அணியில் கேப்டன் ரோஹித் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, உடன் வந்த டி காக் 27 ரன்கள் சேர்த்தார். 3-ஆவது வீரர் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானார். பின்னர் வந்த திவாரி அதிரடியாக ஆடி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 45 ரன்கள் விளாசி வெளியேறினார்.
அதே அதிரடியை வெளிப்படுத்திய பாண்டியா, பொல்லார்டுடன் இணைந்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினார். இறுதியில் பாண்டியா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 40, பொல்லார்ட் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் ரவி பிஷ்னோய் 2, நேதன் எல்லிஸ், முகமது ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

ஹைதராபாதில் வார்னர் ஆட்டத்துக்கு முடிவு?
மோசமான ஃபார்ம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டிருந்த வார்னர், அந்த ஆட்டத்தின்போது அணியின் டகெளட்டில் இதர வீரர்களுடன் காணப்படாதது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமூக வலைதள பதிவில், "துரதிருஷ்டவசமாக இனி மீண்டும் களம் காணப்போவதில்லை. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்' என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சீசனின் முடிவில் ஹைதராபாத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்துக்கான வீரர்கள் பட்டியலில் வார்னர் சேர்க்கப்படலாம் என ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...