ஐபிஎல் 2021: ஆட்ட நாயகன் விருதை வென்ற 7 சிஎஸ்கே வீரர்கள்

ஐபிஎல் 2021 போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற சிஎஸ்கே வீரர்கள்...
ஐபிஎல் 2021: ஆட்ட நாயகன் விருதை வென்ற 7 சிஎஸ்கே வீரர்கள்


கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. பிறகு இந்தியாவில் ஐபிஎல் 2021 போட்டி தொடங்கியது. எனினும் பாதி போட்டி முடிவடைந்த நிலையில் சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஷார்ஜாவில் நடைபெற்ற சென்னை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. சஹா 44 ரன்கள் எடுத்தார். ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளும் பிராவோ 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். பிறகு விளையாடிய சிஎஸ்கே, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதோடு 18 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்கும் தகுதி பெற்றது. கடந்த வருடம் முதல்முறையாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெறாததால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த வருடம் சிஎஸ்கே அணி பெற்ற 9 வெற்றிகளில் 7 வீரர்கள் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார்கள். இதனால் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் சிஎஸ்கே அணியின் வெற்றிக்குப் பங்களித்துள்ளார்கள் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. இதுவே சிஎஸ்கேவின் வெற்றி ரகசியமாகப் பார்க்கப்படுகிறது. தோனி, ராயுடு, ரெய்னா, ஷர்துல் தாக்குர் என சில வீரர்கள் மட்டுமே ஆட்ட நாயகன் விருதை இதுவரை பெறாமல் உள்ளார்கள். 

ஐபிஎல் 2021 போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற சிஎஸ்கே வீரர்கள்

தீபக் சஹார்
மொயீன் அலி
டு பிளெஸ்சிஸ்
ஜடேஜா
ருதுராஜ் கெயிக்வாட்
ருதுராஜ் கெயிக்வாட்
பிராவோ
ஜடேஜா
ஹேசில்வுட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com