கால்குலேட்டர் உதவியின்றி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ஆர்சிபி

லீக் சுற்றின் கடைசிக்கட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எப்போதும் கால்குலேட்டர் தேவைப்படும்...
கால்குலேட்டர் உதவியின்றி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ஆர்சிபி

ஐபிஎல் 2021 போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.

மிகப்பெரிய ஆச்சர்யம், இன்னும் இரு லீக் ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் இந்தத் தகுதியை ஆர்சிபி அடைந்ததுதான்.

லீக் சுற்றின் கடைசிக்கட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எப்போதும் கால்குலேட்டர் தேவைப்படும். நெட் ரன்ரேட் பற்றி அதிகம் விவாதிக்கப்படும். கடந்த வருடமும் கடைசி ஆட்டம் வரை காத்திருந்து தான் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. ஆனால் இம்முறை அதற்கெல்லாம் வேலையே வைக்காமல் ஆர்சிபி அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டது. 

கடைசியாக 2011-ல் தான் இதுபோல கடைசி இரு லீக் ஆட்டங்களுக்கு முன்பே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது ஆர்சிபி. அப்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடமும் பிடித்தது. அதற்குப் பிறகு இப்போதுதான் கடைசிக்கட்டப் பதற்றம் எதுவும் இல்லாமல் பிளேஆஃப் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆர்சிபி 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய பஞ்சாப், 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டும் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று இந்த வருடம் மூன்றாவது அணியாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது ஆர்சிபி.

2011 முதல் பிளேஆஃப்புக்கு ஆர்சிபி தகுதி பெற்றபோது...

2020-ல் 4-ம் இடம் பிடித்து நெட் ரன்ரேட் அடிப்படையில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது. 

2016-ல் 16 புள்ளிகள் பெற்ற மூன்று அணிகள் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றன. 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தது பெங்களூர்.

2015-ல் 16 புள்ளிகள் பெற்ற மூன்று அணிகள் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றன. 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடம் பிடித்தது பெங்களூர்.

2011-ல் 19 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com