ஐபிஎல்: பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ரன்கள் குவிக்கும் ராஜஸ்தான் தொடக்க வீரர்கள்
By DIN | Published On : 05th October 2021 11:48 AM | Last Updated : 05th October 2021 01:59 PM | அ+அ அ- |

டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் (1-6) அதிக ரன்கள் எடுப்பது அவசியமானது. ஓர் அணி அதிக ஸ்கோரை எடுக்க ஆசைப்பட்டால் அதற்கான வேலைகளை பவர்பிளே ஓவர்களில் இருந்து தொடங்க வேண்டும்.
ஐபிஎல் 2021 போட்டியில் ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் 2021 போட்டியில் அந்த அணி பவர்பிளே ஓவர்களில் வேறெந்த அணிகளை விடவும் அதிக ரன்கள் எடுத்து அசத்தி வருகிறது.
இதற்கு முக்கியக் காரணம், எவின் லூயிஸ் - ஜெயிஸ்வால் என்கிற புதிய தொடக்கக் கூட்டணி. இருவரும் 5 இன்னிங்ஸில் 225 ரன்கள் எடுத்துள்ளார்கள். ஒரு ஓவருக்கு 10.54 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளார்கள். காரணம் ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடைபெற்றபோது ராஜஸ்தான் அணி மூன்று விதமான தொடக்கக் கூட்டணிகளை முயற்சி செய்து பார்த்தது. 7 இன்னிங்ஸில் 161 ரன்கள் தான் அவர்கள் எடுத்தார்கள். ஒரு ஓவருக்கு 6.85 ரன்கள் மட்டுமே. ஆனால் எவின் லூயிஸ் - ஜெயிஸ்வால் கூட்டணி தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய பிறகு நிலைமை மாறிவிட்டது. சிஎஸ்கேவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பவர்பிளேயில் அதிரடியாக ஆடியதை யாரால் மறக்க முடியும்?
இந்த வருட ஐபிஎல் 2021 போட்டியில் பவர்பிளேயில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்களில் ராஜஸ்தானின் எவின் லூயிஸுக்கு முதலிடம். ஜெயிஸ்வாலுக்கு 3-ம் இடம்.
ஐபிஎல் 2021: பவர்பிளேயில் அதிக ஸ்டிரைக் ரேட்
எவின் லூயிஸ்: 189.65
பிருதிவ் ஷா: 169.62
ஜெயிஸ்வால்: 151.85
பேர்ஸ்டோ: 167.41
ஜெயிஸ்வால்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021: பவர்பிளேயில் ஒரு ஓவருக்கு அதிக ரன்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ்: 8.80 ரன்ரேட்
ஆர்சிபி: 8.43
கேகேஆர்: 8.25
சிஎஸ்கே: 7.61