காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ஐபிஎல்: ஆர்சிபி அணியிலிருந்து இரு இலங்கை வீரர்கள் விலகல்

ஆர்சிபி அணியைச் சேர்ந்த துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரும்...

வனிந்து ஹசரங்கா

Published On :

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியைச் சேர்ந்த துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டியின் கரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ளார்கள். 

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஆகஸ்ட் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. 

அக்டோபர் 17 முதல் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. இதில் நமிபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை மோதவுள்ளது. அக்டோபர் 18-ல் நமிபியாவுக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை இலங்கை விளையாடுகிறது. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்களான துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். இருவரும் கரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறியதை ஆர்சிபி அணி உறுதி செய்துள்ளது. இதனால் கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் இருவரும் இடம்பெற மாட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.