தோனியைப் பின்பற்றினாரா மார்கன்? பலனளித்த 'சிக்ஸர்' நரைன் நகர்வு

குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் ஷர்துல் தாக்குர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டதைப்போல எலிமினேட்டர் ஆட்டத்தில் சுனில் நரைன் முன்கூட்டியே களமிறக்கப்பட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்குப் பலனளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் ஷர்துல் தாக்குர் முன்கூட்டியே களமிறக்கப்பட்டதைப்போல எலிமினேட்டர் ஆட்டத்தில் சுனில் நரைன் முன்கூட்டியே களமிறக்கப்பட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்குப் பலனளித்துள்ளது.

எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து 138 ரன்கள் எடுத்தது.

139 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவுக்கு ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.

பவர் பிளே முடிந்த அடுத்த ஓவரிலேயே நல்ல நிலையில் உள்ள ராகுல் திரிபாதி (6) விக்கெட்டை யுஸ்வேந்திர சஹால் வீழ்த்தினார். இதன்பிறகு, வெங்கடேஷுடன் இணைந்து நிதிஷ் ராணா பாட்னர்ஷிப் அமைத்தார். 26 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்ஷல் படேல் பந்தில் ஆட்டமிழந்தார் வெங்கடேஷ்.

கடைசி 9 ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டன. இதனால், ஆட்டம் சமநிலையில் இருந்தது.

ஆனால், குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி முன்கூட்டியே ஷர்துல் தாக்குரை களமிறக்கினார். ஆனால், சென்னைக்கு அது பலனளிக்கவில்லை. முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டத்தில் அதேபாணியைக் கடைப்பிடித்து சுனில் நரைன் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். வந்த வேகத்தில் டேன் கிறிஸ்டியன் ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை முற்றிலும் கொல்கத்தா பக்கம் திருப்பினார். இந்த நெருக்கடியில் 3 சிக்ஸர்களுக்கு மத்தியில் 2 வைட் பந்துகளையும் கிறிஸ்டியன் வீசினார்.

இதனால், கடைசி 8 ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 38 ரன்கள் மட்டுமே தேவை என வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 5-க்குக் கீழ் குறைந்தது.

சென்னைக்குப் பலனளிக்காத நகர்வு நரைனின் சிக்ஸர்கள் மூலம் கொல்கத்தாவுக்குப் பலனளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com