கேப்டன் பதவியிலிருந்து விலகியது ஏன்?: முதல்முறையாக உணர்வுகளை வெளிப்படுத்திய விராட் கோலி

ஆர்சிபி மற்றும் இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கான காரணத்தை விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார்.
கேப்டன் பதவியிலிருந்து விலகியது ஏன்?: முதல்முறையாக உணர்வுகளை வெளிப்படுத்திய விராட் கோலி

ஆர்சிபி மற்றும் இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியதற்கான காரணத்தை விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (ஆர்சிபி) கேப்டனாகத் தனது கடைசி ஆட்டத்தை விளையாடி முடித்துவிட்டார் விராட் கோலி. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. அடுத்ததாக, ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். பிளேஆஃப் சுற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி அணி தோற்றதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அந்த அணி வெளியேறியுள்ளது. இதையடுத்து விராட் கோலியின் ஆர்சிபி கேப்டன் பயணமும் முடிவடைந்தது. இனி ஐபிஎல் போட்டியில் விளையாடும் வரை ஆர்சிபி அணியில் தொடர்வேன் என உத்தரவாதம் தந்துள்ளார் கோலி.  2008-ல் யு-19 உலகக் கோப்பையை வென்ற பிறகு ஆர்சிபி அணிக்குத் தேர்வானார் விராட் கோலி. 2013 முதல் அந்த அணியின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் ஸ்டார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இன்சைட் ஆர்சிபி நிகழ்ச்சியில் விராட் கோலி பேட்டியளித்தார். அதில் கேப்டன் பதவியிலிருந்து விலகியது பற்றி மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது:

என்னுடைய பணிச்சுமையை நான் சமாளிக்க வேண்டியிருந்தது. வருடம் முழுக்க மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கும் ஐபிஎல்-லில் ஆர்சிபி அணிக்கும் கேப்டனாக இருப்பது சாத்தியமில்லை. ஒரு பேட்ஸ்மேனாக என்னுடைய அணிக்காக முழுத்திறமையையும் வெளிப்படுத்த எண்ணுகிறேன். அதேநேரத்தில் ரசித்து விளையாடுவதையும் இழக்க நான் விரும்பவில்லை. ஆட்டத்தில் 80% உழைப்பை மட்டும் செலுத்த விரும்பவில்லை. அதேசமயம் என்னால் இயல்பாக முழு  ஆற்றலையும் வெளிப்படுத்த முடியாமல் அணியின் சூழலைக் கெடுக்க விரும்பவில்லை. நான் நானாக இருக்க முடியாத சூழலைக் கொண்ட ஓர் கட்டமைப்பை நான் ஏற்கவில்லை. மிகச்சிறந்த மனநிலையுடன் அணிக்குப் பங்களிக்கவே விரும்புகிறேன். சிறந்த திறமையை வெளிப்படுத்தவே விரும்புவீர்கள். அது இல்லாவிட்டால் சுயநலமாக இருப்பது போல் ஆகிவிடும். புத்துணர்ச்சியுடன், புதிய யோசனைகளுடன் செயல்படும் இன்னொருவர் அணிக்குத் தேவை. நீங்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்தி தொடர்ந்து உங்கள் தலைமைப்பண்பை வெளிப்படுத்த முடியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com